free website hit counter

செப்டம்பரில் வானில் வெறும் கண்களுக்குத் தெரியக் கூடிய புதிய நட்சத்திரம்?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இவ்வருடம் சிரியஸ் துருவ நட்சத்திரத்துக்கு இணையாக ஜொலிக்கவுள்ள அரிதான நட்சத்திர நிகழ்வு

பூமியில் இருந்து 3000 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள T Coronae Borealis என்ற இரட்டை நட்சத்திரத் தொகுதியில் மிகப் பெரிய சிவப்புக் குள்ளன் (Red Dwarf) நட்சத்திரத்தினால் அருகே இருக்கும் வெள்ளைக் குள்ளன் நட்சத்திரம் (White Dwarf) ஈர்க்கப் படும் Nova outburst என்ற நிகழ்வின் காரணமாக பூமியில் இருந்து பார்க்கும் மனிதனின் வெறும் கண்களுக்கு துருவ நட்சத்திரமான சிரியஸ் இற்கு இணையான பிரகாசம் கொண்ட புது நட்சத்திரம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜொலிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இந்நிகழ்வு மிக அரிதானதாகும். Blaze Star என்றும் அழைக்கப் படும் இந்த புது நட்சத்திரம் இறுதியாக 1866 இல் ஜோன் பிரிமிங்ஹாம் என்பவரால் அவதானிக்கப் பட்டு பதிவு செய்யப் பட்டது. குறித்த வெள்ளைக் குள்ளன் நட்சத்திரம் சிவப்பு நட்சத்திரத்தின் சக்தியை உறிஞ்சும் போது ஏற்படும் அணுக்கரு இணைவு (Nuclear Fusion) காரணமாக மிகக் குறுகிய நேரத்தில் அதன் பிரகாசம் பன்மடங்கு அதிகரிப்பதால் தான் பூமியில் இருந்து பார்க்கும் எமது வெறும் கண்களுக்கு இது புது நட்சத்திரமாகத் தென்படவுள்ளது.

இந்த வருடம் தென்படுவதானால் 2024 செப்டம்பர் மாதமளவில், வடக்கு கிரீடம் (Northern Crown) எனப்படும் Coronae Borealis நட்சத்திரத் தொகுதியில் மிகப் பிரகாசமாக ஜொலிக்கும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர். ஆனால் ஒரு சூப்பர் நோவா காரணமாக பூமியில் தோன்றக் கூடிய புதிய நட்சத்திரத்துக்கு இணையான பிரகாசத்தினை மிகத் திருத்தமாக இப்போது தான் நிகழும் எனப் பிரகடனம் செய்வது இலகுவான ஒரு விடயமல்ல என வானியலாளர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction