website analysis

2026ம் ஆண்டு நோபல் பரிசுகள் அறிவிப்பு ஆரம்பம் !

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2026 ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படத் தொடங்கியுள்ளன. டைனமைட்டைக் கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டு வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் அவர்களின் உயிலின்படி 1901 முதல் வழங்கப்பட்டு வருகிறது நோபல் பரிசு.

உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதின் 125-வது ஆண்டு நிறைவுப் பதிப்பாக இந்த 2026ம் ஆண்டு வருவது குறிப்பிடத்தக்கது.புதுமையான சர்வதேச கல்விசார் பணிகளின் மூலம் மூளை குறித்த ஆய்வில் மூன்று விஞ்ஞானிகள் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்புக்களுடன் இன்று தொடங்கிய அறிவிப்புக்கள், வரும் அக்டோபர் 12 அன்று பொருளாதாரத்திற்கான பரிசு அறிவிப்பு வரை வரிசையாக அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

மிகக் குறுகிய காலத்தில் மூளை குறித்த ஆய்வில் புரட்சியை ஏற்படுத்தி, தாவரவியல் மற்றும் உயிர்வேதியியல் துறைகளில் சாதனை படைத்துள்ள, ஜெர்மனியைச் சேர்ந்த ஜார்ஜ் நாகல் (Georg Nagel), பீட்டர் ஹெஜெமன் (Peter Hegemann)அமெரிக்கரான கார்ல் டீசெரோத் (Karl Deisseroth) ஆகியோருக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்