free website hit counter

மீட்கப்படும் ஓசோன் துவாரம்!

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நம் பூமிக்கு நேரடியாக வந்தடையும் புற ஊதாக் கதிர்களை தடுக்கும் ஓசோன் படலத்தின் துவாரம் தொடர்ந்து சுருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமியின் தெந்துருவத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து ஏற்பட்ட துவாரம் ஆண்டுதோறும் விரிவடையும் தன்மையிலிருந்து சுருங்கிவருகிறது. அவ்வகையில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2024 இல்  ஓசோன் படலத்தின் சிதைவு மீட்கப்பட்டுவருவதால் மேலும் சிறிதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் இரசாயனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான ஒரு முக்கிய சர்வதேச ஒப்பந்தமான மாண்ட்ரீல் நெறிமுறை 1992 இல் இருந்து நடைமுறைக்கு வரத் தொடங்கியது. இதன் பின்னரான செயல்பாடுகளால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாசா மற்றும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) விஞ்ஞானிகள் ஓசோன் படலத்தை 2066 க்குள் முழுமையாக மீட்டெடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலைகள், வாகனங்கள் மட்டும் குளிர்சாதன பெட்டிகளிலிருந்து வெளியாகும் புகை மட்டும் வாயுக்களாலும்; வெளிச்சூழலில் தேவையற்ற பொருட்களை மண்ணில் போட்டு எரிப்பதால் ஏற்படும் புகை  ஆகியவற்றாலும் ஓசோன் படலம் பாதிப்படைகிறது. இதனால் சூரியனால் நேரடியாக வந்தடையும் புற ஊதாக் கதிர்கள் தோல் புற்றுநோய் மற்றும் கண்பார்வைக்கோளாறு உள்ளிட்ட பாதிப்புக்கள் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஏற்படுவது குறிப்பிடதக்கது. ஆகவே உரிய முறையில் கழிவுகளை மறுசூழற்சி செய்து மண்ணின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் மரங்கள் வளர்ப்பை அதிகரிப்பது அவசியமாகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula