free website hit counter

பூமியின் புதிய வரைபும், மிகக் குறைந்த மனிதக் குடியேற்றமும்!

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமீபத்தில் வெளியான பூமியின் புதிய புவியியல் வரைபடம் ஒன்றில் எமது பூமியின் கிட்டத்தட்ட 50% வீத நிலப்பரப்பு மிகக் குறைந்த மனிதக் குடியேற்றங்களை மாத்திரமே கொண்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் புவியியல் ஆய்வானது அமெரிக்காவின் மேரிலாண்ட் பால்டிமோர் பல்கலைக் கழகத்தால் மேற்கொள்ளப் பட்டது.

இதில் மனித இனத்தின் விவசாயம், நகர உள்கட்டமைப்பு, அல்லது குடியிருப்புக்கள் என்பவை பூமியின் மொத்த நிலப்பரப்பில் 50% வீதத்துக்கும் குறைவாகவே ஆக்கிரமித்துள்ளன. நேஷனல் ஜியோகிராபிக் தளத்தில் பதிவிடப் பட்டுள்ள இந்தப் புதிய வரைபடம் Global Change Biology என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இந்த வரைபடத்தில் செறிந்த பச்சை நிறத்தில் இருக்கும் நிலப்பரப்புக்கள் மனிதக் குடியேற்றங்கள் மிகக் குறைந்த பகுதிகளாகும்.

பூமியில் புதிய இயற்கை வளங்களை ஆராயவும், மனிதக் குடியேற்றம் அற்ற இடங்களைக் குறித்து அறிந்து கொள்ளவும், பூமியில் எந்தெந்த பகுதிகளில் பாதைகள், ரயில்வே பாதைகள், நீர்ப்பாசனம் மற்றும் இரவு மின் ஒளி விளக்குகள் அவசியமான பகுதிகள், கணியங்கள் போன்றவை இருக்கின்றன என்பதைக் குறித்து வைப்பதற்கும் இந்தப் புதிய வரைபடம் பயன்படவுள்ளது.

2021 ஆமாண்டு உலகளாவிய உயிர்ப் பல்வகைமை தொடர்பான மாநாடு ஒன்றில் 2050 ஆமாண்டுக்குள் இந்த மனிதத் தாக்கம் அற்ற 50% வீத இயற்கை நிலப் பரப்புக்களைப் பூரணமாகப் பாதுகாப்பது தொடர்பான இலக்கு பற்றி விவாதிக்கப் படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction