ஈர்ப்பானது (Gravity) காலவெளி (Space-Time) கணித வரைவில் உள்ள வளைவா (Curvature), அல்லது ஒரு விசையா (Force), அல்லது ஒரு அலையா (Wave) எவ்வாறு இதனை விளங்கிக் கொள்ள முடியும்?
மிக எளிமையாக சொல்வதானால் ஈர்ப்பானது ஒரு விசை தான். உதாரணத்துக்கு மிகவும் பாரமான ஒரு பந்தை உங்கள் பாதத்தின் மீது மேலே இருந்து (சற்று மேலே) விடுங்கள்...
உங்களால் வலியை உணர முடிகின்றதா? அப்படியானால் அதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை என்றால் அதனை ஒரு விசை அல்ல என்று நீங்கள் எவ்வாறு மறுதலிக்க முடியும்? ஆனால் பொது சார்புக் கொள்கையில் (General Relativity) ஈர்ப்பானது ஒரு மாய மைய விலக்கு விசையாகவே கருதப் படுகின்றது. நீங்கள் பூமியில் நின்று கொண்டிருந்தாலும், இந்த பூமியும், சூரியனும், பால்வெளி அண்டமும் ஒன்றை ஒன்று சார்ந்து அதிகரிக்கும் வேகத்தில் பிரபஞ்சத்தில் விரிவடைந்து கொண்டிருக்கும் ஒரு தொகுதியில் தான் நீங்கள் நிற்கின்றீர்கள்.
நீங்கள் பூமியில் நிற்கும் போது தூக்கி எறியப் படாது உங்களை எது தக்க வைத்துக் கொள்ளுதோ அந்த ஈர்ப்பு விசையானது முழு பிரபஞ்சத்துக்கும் பொருந்தக் கூடியது. (Universal) இந்த ஈர்ப்பு விசையானது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சடப்பொருளிலும் சமனாக இயங்கி வருகின்றது. இந்த ஈர்ப்பு விசையை சார்புக் கொள்கை அடிப்படையில் கணித ரீதியாக விளங்கிக் கொள்ளும் போது கால வெளி வரைபில் எது தனது தன்மை காரணமாக பிரபஞ்சதில் உள்ள எந்த ஒரு சடப்பொருள் சார்பாகவும் வெளியை (Space) வளைக்கின்றதோ அதுவே ஈர்ப்பு விசை என கேத்திர கணித (Geometry) ரீதியாக கையாளப் படுகின்றது.
மறுபுறம் ஈர்ப்பு அலையாகவும் தொழிற்படுகின்றது. இதனை ஈர்ப்பு அலைகள் (Gravitational Force) என்பர். இந்த ஈர்ப்பு அலையானது சக்தியையும், உந்தத்தையும் அலை வடிவில் கடத்துகின்றது. இந்த ஈர்ப்பு அலை மிக மிகத் தூரத்தில் உள்ள எந்தவொரு சடத்தில் இருந்தும் வெளிப்படுவது பூச்சியமாக இருப்பதில்லை. மேலும் பிரபஞ்சத்தின் அதி உச்ச மாறிலி வேகமான வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தில் தான் ஈர்ப்பு அலைகளையும், சக்தியையும், உந்தத்தையும் இது அதிகபட்சமாகக் கடத்துவதாகவும் கருதப் படுகின்றது.
நன்றி : Quora
- 4தமிழ்மீடியாவுக்காக நவன்