free website hit counter

விளையாட்டு மைதானத்தின் விட்டம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகே இவ்வருடம் கடக்கும்! : நாசா மற்றும் ESA

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இவ்வருடம் ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தின் விட்டத்தை உடைய மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகே கடக்கவிருப்பதாகவும் அது பூமியுடன் மோத கிட்டத்தட்ட 1/7000 மடங்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

பூமிக்கு அருகே 4.2 மில்லியன் மைல் தூரத்தில் கடக்கவுள்ள இந்த விண்கல்லானது 2006 QV89 எனப் பெயரிடப் பட்டுள்ளது. இதன் விட்டம் 164 அடியாகும். இந்த விண்கல் பூமிக்கு மிக அருகே இவ்வருடம் செப்டம்பர் 9 ஆம் திகதி வருகின்றது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆபத்தான விண்கற்கள் பட்டியலில் இதற்கு 4 ஆவது இடம் அளிக்கப் பட்டுள்ளது. 2006 ஆகஸ்ட் 29 ஆம் திகதி இந்த விண்கல் முதன் முறை அவதானிக்கப் பட்டது. 2013 ஆமாண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பகுதியில் சக்தி வாய்ந்த விண்கல் ஒன்று விழுந்து ஏற்படுத்திய சேதாரத்தில் 7200 கட்டடங்கள் சேதமடைந்தும் 1500 பேர் காயமடைந்தும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction