"இதெல்லாம் ஒரு ஓவியமா? என கேள்வி எழுப்பும் புரிதல்களுக்கு மத்தியில் மனிதத்தின் உள்ளே தான் புரிந்துகொண்ட புள்ளிகளையும் கோடுகளையும் இணைத்து காட்சிப்படுத்த முயல்கிறார்
ஓவியக்கலைஞர் த. கிருஷ்ணப்பிரியா
கொரோனா சற்று ஓய்ந்தாலும் இலங்கையின் நெருக்கடி நிலை ஓய்ந்தபாடில்லை, இதன் நடுவே கிடைக்கப்பெற்ற பெரும் சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்து விதமாக 'அகவயப்படுத்துதல்' எனும் அழகியல் கண்காட்சி ஒன்று யாழில் கடந்த 3ஆம் திகதியிலிருந்து நடைபெற்று வருகிறது.
நாங்களும் தவறவிடாக்கூடாது என நேரில் சென்று பார்க்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டோம். படைப்புக்களை காட்சிப்படுத்தி வெளிப்படுத்த சிறந்த களமாக யாழ்ப்பாணத்தில் இல்லம் போன்ற 'கலம்' அமைந்திருப்பதும் அதிலும் இது போன்ற கண்காட்சிகள் நடைபெறுவதும் அரிதிலும் அரிது.
மனித உடல் ரத்தமும் சதையும் மட்டுமன்றி சின்ன திசுக்களாலும் செல்லுகலாலும் ஆனது. அது போன்றே இயற்கை வளங்களும். ஒரு கரு உருவாகுவது முதல் வளர்ந்து செல்லும் வரை செயல்படும் திசுக்கள், செல்கள், நுண்கிருமிகள் தமது ஒவ்வொரு அசைவிலும் மாறுபட்ட தோற்றங்களை உருவாக்குகின்றன, இயற்கையின் இயல்பை கொண்டே வரைதலை நாம் உருவாக்குகின்றோம்; கோடுகள், புள்ளிகள், வட்டம், சதுரம், முக்கோணம் என கிடைக்கும் வடிவங்களை இணைத்து; கலந்த கலவையாக மாற்றும் போது அதிலே உருவங்கள் தோன்றுகின்றன. இவ்வாறானா மனிதத்தின் அறியப்படாத ஆனால் கேள்வி எழுப்பி ஆச்சரியத்திற்குள் மூழ்கடிக்கும் படைப்புக்களை காட்சிப்படுத்தியது 'மெய்சிலிர்க்கும்' அனுபவத்தை தந்தது எனலாம்.
மனிதத்தின் தோற்றம் மற்றும் அதன் உள் வெளிப்புறத் தன்மையை வரைதல், எனும் செயற்பாட்டை ஓர் புதிய யதார்த்தத்துக்கு இடமளித்து அதன் அதிர்ச்சிகரமான அறியப்படாத இருப்பை கொண்டாட முற்படுவதாகவும் வரைதல் மூலம் மனித நிலையின் உள் நிலப்பரப்புக்கான ரகசிய செயல்முறையை கண்டறிவதை நோக்கமாகவும் தான் கொண்டுள்ளதாக இந்த கண்காட்சி குறித்து கிருஷ்ணப்பிரியா தெரிவிக்கின்றார்.
மிக மிக நுனுக்கத்தையும் அவதானத்தையும் ஆழமாக செலுத்தி பொறுமையாக ஒவ்வொன்றும் உருவாக்கம் பெற்றிருப்பதை அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு படைப்பிலும் காணலாம்.
நேர் சீரான. வர்ணங்கள் நிறம்பிய அல்லது மிக யதார்த்தபூர்வ ஓவிய படைப்புக்களை தவிர இது போன்ற படைப்புக்களிலும் நீங்கள் ஆர்வமுடைவர்கள் எனில் நிச்சயம் நேரில் சென்று பார்க்கவேண்டிய கண்காட்சி இது!
Photography: Courtesy Kälam
சமூக வலைத்தளம் மற்றும் விபரம் : Kalam