free website hit counter

விஜய் டிவி டிடியின் சுவாரஸ்யமான முனைவர் பட்ட ஆய்வு!

கலாச்சாரம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விஜய் டிவி புகழ் தொகுப்பாளினி டிடி என செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, சென்னை பல்கலைக் கழகத்தின் வரலாறு பாடத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் வட தமிழ்நாட்டை 19-ஆம் நூற்றாண்டி ஆண்டு வந்த ஆற்காடு நவாபுகளின் சரித்திரத்தில் ‘தென்னிந்திய இஸ்லாமிய ஆட்சியாளர்களின் சமயச் சகிப்புத்தன்மை’ என்ற தலைப்பில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வைச் செய்துவரும் அவர், தனது அவரது ஆய்வில் கிடைத்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

“கோவில்களை இடித்து பள்ளி கட்டினார்கள்' என்ற என்று பல ஆண்டு காலமாக நாம் படித்து வருகிறோம். முஸ்லிம் நவாபு ஆட்சியாளர்கள் சில காலமே தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஆண்டாலும் பிறசமய சகிப்பு, சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனார். அவர்கள் மத்திய மற்றும் வட தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு தானமாக அளித்த சொத்துக்களின் பட்டியலைப் பார்த்தாலே இதைப் புரிந்துகொள்ளலாம்” என்று கூறி ஒரு பட்டியலையும் அளித்துள்ளார். அந்த பட்டியல் வருமாறு:

1.தற்போது சென்னையில் உள்ள வாலாஜா ரோடும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளும் முகமது அலிகான் தானமாக கொடுத்தது. அவரது பெயராலேயே இன்றும் வாலாஜா என்று வழங்கப்படுகிறது.

2. திருச்சி புனித ஜோசப் கல்லூரி, பிஷப் கல்லூரி, ஆற்காடு நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.

3. தற்போது சென்னையில் உள்ள தலைமை செயலகம் ஆற்காடு நவாபு அவர்களின் சொந்த வீடாகும். அதனையும் தானமாக தந்துள்ளார்.

4. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பக் குளம் ஆற்காடு நவாபால் தானமாக அளிக்கப்பட்டது. வருடா வருடம் இந்த கோவிலில் அவரை அழைத்து முதல் மரியாதை இன்று வரை கொடுத்து வருகின்றனர்.

5. தற்போதுள்ள மெட்ராஸ் யுனிவர்சிடியும் ஆற்காடு நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.

தங்களின் சொந்த வீட்டையும் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள தங்களின் சொத்துக்களையும் கோவில்களுக்கும் தேவாலங்கள், கல்வி நிலையங்களுக்கு அரசு கட்டிடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தானமாக கடைசியாக ஆண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள் கொடுத்துள்ளனார். ஆனால் தமிழக, இந்திய வரலாறு பாடத் திட்டங்களில் சொல்லிக் கொடுப்பதோ இதற்கு நேர் மாறாக உள்ளது. நாவாபுகளுக்கு முந்தைய முஸ்லிம் ஆட்சியாளர்களுடன் நவாபுகளை இணைக்கக் கூடாது. தமிழகம் என்றுமே இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும்” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் டிடி குறிப்பிட்டுள்ளார்.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction