free website hit counter

முடிவுக்கு வந்தது சீமான் - விஜய்சேதுபதி மோதல்!

சினிமா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாம் தமிழர் கட்சிக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கும் பனிப்போர் நடந்து வந்ததை
வாசகர் அறிவார்கள். இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த சனத் ஜெயசூர்யாவின் வாழ்க்கை வரலாற்றை 800 என்ற தலைப்பில் பயோபிக் திரைப்படமாகத் தயாரிக்க முடிவு செய்து அறிவிப்பும் வெளியான நிலையில், உருவ ஒற்றுமை காரணமாக சனத் ஜெயசூர்யா கதாபாத்திரத்திரத்தில் விஜய்சேதிபதி நடிக்க ஒப்புக்கொண்டதாக அவரே தெரிவித்தார்.

ஆனால், தமிழ் மக்கள் இலங்கை உள்நாட்டுப்போரில் கொன்றொழிக்கப்பட்டது குறித்த எந்த குற்றவுணர்வும் இல்லாமல் சனத் தனது அணுகுமுறையைக் கடைபிடித்தார் என்று கூறப்பட்டது. இதனால் 800 படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது தமிழினத்துக்கு செய்யும் துரோகமாகும் என்று நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கை வைத்தனர். பெரும் சர்ச்சையும் வற்புறுத்தல்களும் வந்த நிலையில் விஜய்சேதுபதி படத்திலிருந்து வெளியேறினார். இதனால் நாம் தமிழர் மீது விஜய்சேதுபதி பெரும் கோபத்தில் இருந்தார் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒளிப்பதிவாளர் மணிகண்டன் தான் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படத்தின் காட்சியை சீமானுக்குப் போட்டுக்காட்ட, அதற்கு படத்தில் நடித்திருந்த விஜய்சேதுபதியும் வந்திருந்தார். இவரும் சந்தித்து நட்புடன் பேசிக்கொண்டனர். இதன்மூலம் சீமான் - விஜய்சேதுபதி மோதல் முடிவுக்கு வந்துவிட்டது என்கிறார்கள்.

4தமிழ் மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction