free website hit counter

ஆரம்பமாகியது லொகார்னோ சர்வதேச திரைப்படவிழா !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மழையின் தூறல்களுடன் கலையின் சாரல்களும் இணைந்திட ஆரம்பமாகியது லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 76 வது பதிப்பாக 2023 ம் ஆண்டிற்கான திரைத்திருவிழா.

02.08.23 மதியம் முதலே பத்திரிகையாளர் காட்சிகளும், அரங்குகளில் திரையிடலும், ஆரம்பமாகியிருந்த போதிலும், செங்கம்பள வரவேற்பு மற்றும் பியாற்சா கிரான்டே பெருமுற்றத் திறந்தவெளித் திரையிடலுடன் கூடிய சம்பிரதாய பூர்வமான தொடக்க விழா இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.

இத் தொடக்க விழாவினைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்த வைத்த விழாக் குழுவின் தலைவர் மார்க்கோ சோலாரி " பல்வேறு தடைகளையும் தாண்டி, சினிமா எனும் பெருங்கலையுடனும், ரசனையுடனும், 76வது பதிப்பில் உங்கள் முன் நிற்கின்றோம் " எனத் தனது குழு உறுப்பினர்களுடன் இணைந்து நின்றவாறே தனது ஆரம்ப உரையினைத் தொடங்கினார். அவர் மேலும் பேசுகையில், இந்த விழாவினை ஒரு பெரும் கலாச்சார நிகழ்வாக அங்கீகரதித்து காத்து வரும் நடுவன் அரசுக்கும், உறுதுணையாக நிற்கும் விளம்பர அனுசரணையாளர்களுக்கும், நன்றிகளைத் தெரிவித்ததோடு, உலகின் பல பாகங்களிலிருந்தும், வருடந்தோறும் லொகார்னோ திரைப்படவிழாவினை நாடி வரும் பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களுக்கும், அவர்களை அனுசரித்து மகிழும், லொகார்னே நகரசபையினரையும் மற்றும் பொதுமக்களையும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்ந்தார்.

" இந்த கலாரசனையின் வெற்றி எதுவென்றால் இதோ மழையின் தூறல்களுக்கு மத்தியிலும், இந்தப் பெருமுற்றத்தில் பார்வையாளர்களாக இத்தனை ஆயிரம் பேர் திரண்டு நிற்பதுதான் " எனக் கூறி தனது ஆரம்ப உரையினை நிறைவு செய்தார். சுமார் 23 வருடங்களாக இந்தக் குழுவின் தலைவராக இருந்து வரும் திரு. மார்க்கோ சொலாரி அவர்கள் இந்த ஆண்டுடன் அப் பொறுப்பிலிருந்து ஒய்வு பெறுகின்றார். ஆளுமை மிக்க அவரது தலைமைப் பொறுப்பிற்கு, திரைப்பட விழாவின் தலைவர் பொறுப்பை ஏற்கும் முதல் பெண்மணி என்ற பெருமையுடன் மஜா ஹாஃப்மேன் வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு மாற்றங்களுடனும், அழகியலுடன் வடிவமைக்கபட்டிருக்கும் இத் திரைப்படவிழாவில் குறிப்பிடத்தக்கத மாற்றங்கள் பலவும் அவதானிக்க முடிந்தது.

நேற்று மாலை செய்தியாளர்கள் மற்றும் படைப்பாளர்களுடன் நடைபெற்ற ஆரம் நிகழ்வில் கலந்து கொண்ட சுவிற்சர்லாந்து அரச கூட்டமைப்பின் தலைவர் அலைன் பெர்செட் பேசுகையில், "கடந்த பத்து ஆண்டுகளில், தீவிர மாற்றங்களை கலாச்சாரத்தில் சினிமா போன்ற வேறு எந்தத் துறையும் சந்தித்ததில்லை," எனக் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், சுவிட்சர்லாந்தின் கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல், சமூக ஒருங்கிணைப்பு, குறிப்பாக மொழி கற்பித்தல், ஆதரவு. கலாச்சார பங்கேற்பு மற்றும் அமெச்சூர் கலாச்சாரம் என்பவற்றுக்கு, ஒரு உந்து சக்தியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் இத்திரைப்படவிழா ஐரோப்பாவிலும் முக்கிய பங்கு வகிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.

நேற்றைய ஆரம்பவிழாவில், பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தின் முதல் திரையிடல்களாக, ஆரம்ப விழாவில் Excellence Award பெற்ற Riz Ahmed நடித்த பிரெஞ்சு மொழியிலான Dammi எனும் குறுந்திரைப்படமும், Fiona Gordon, Dominique Abel இரட்டையர்கள் எழுதி, இயக்கி, நடித்த, L'Etoile Filante (The Falling Star) பிரெஞ், பெல்ஜியம் மொழியிலான திரைப்படமும் முதல் திரையிடலாக காட்சிப்படுத்தப்பட்டன. இத் திரைப்படங்கள் குறித்த பார்வைகளைத் பின்னர் தனியாகக் காண்போம்.

-4தமிழ்மீடியாவிற்காக லொகார்னோவிலிருந்து மலைநாடான்

படங்கள் : Locarno Film Festival / Ti-Press

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: