free website hit counter

சினிமா எனது மதம் : லொகார்னோவில் பரிசு பெற்ற Stacey Sher 

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லொகார்னோ திரைப்பட விழாவின் நேற்றைய கௌர விருதினை, அமெரிக்காவின் மிக மரியாதைக்குரிய சுயாதீன சினிமா தயாரிப்பாளர் Stacey Sher பெற்றுக்கொண்டார்.

Quantin Tarantino, Ben Stiller, Steven Soderbergh, Danny DeVito, George Clooney, Cate Blanchette, Julia Robers, Samuel L.Jakson என 1990 - 2000 காலப்பகுதியில் உருவெடுத்த மிக சிறந்த அமெரிக்க சினிமா சுயாதீனக் கலைஞர்கள் அவர் தயாரிப்பிலும், அவருடைய தொலைநோக்கு பார்வையின் நம்பிக்கையிலும் உருவாகியவர்கள். 

"முன்னோக்கியே பார்த்தவர்கள் நாங்கள், என்ன செய்தோம் என்பதை பின்னோக்கி திரும்பி பார்த்தது குறைவு. நாளை கண் முன் என்ன சவால் இருக்கிறது. எப்படி இப்போது செய்து கொண்டிருக்கும் திரைப்படத்தை நகர்த்தி கொண்டு செல்லலாம் என்பதே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் சினிமாவை ஒரு மதமாகவும், திரையரங்குகளை, கிறிஸ்தவ தேவாலயங்களாகவும் பார்க்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் நான், இப்படி, பியாற்சே கிராண்டே பெருதிரையரங்கில், எம்மை மேடையேற்றி கௌரவிக்கும் போது தான், தெரிகிறது கடந்து வந்த பாதை என்ன, எவ்வளவு திரைப்படங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறோம் » என அவர் சொல்லி முடிக்கும் போது, 8000 மக்கள் சூழ்ந்த பியாற்சே கிராண்டே திரையரங்கும் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தியது. 

Django Unchained மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான சுயாதீன (independant) திரைப்படம். அது இவரது தயாரிப்பின் கீழ் உருவானது. அதன் பின்புலத்தில் அமெரிக்க பிரமாண்ட கிளாசிக்கல் ஸுடீயோக்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் அந்த திரைப்படம் அமெரிக்க கறுப்பின அடிமைக்காலத்தின் மிக இருண்ட பக்கங்களை, லியானோ டி காப்ரியோவின் மிக கொடூரமான எதிர்மரை கதாபாத்திரத்தின் மூலமும், அதன் சிறந்த entertainement visuels இன் மூலமும் நிராகரிக்க முடியாத சினிமாவாக உலகெங்கும் நடைபோட வைத்தது.

அதற்கு பல வருடங்களுக்கு முன்னர் 1994 இல் வெளிவந்த Pulp Fiction படமும் அப்படியொரு சுயாதீன ஆனால் சினிமா ஜானர்களுக்குள் இலகுவில் அடங்கிவிட முடியாத திரைப்படம். ஆனால் மிக லாகவமான entertainment திரைப்படமாக உருவானது. அதன் தயாரிப்பிலும் Stacey Sher பின்புலத்திலிருந்தார். 

அவை உலக சினிமாவில் ஏற்படுத்திய தாக்கங்கள், எவ்வளவு புதிய இயக்குனர்களை இதே போன்று சினிமா படங்களை புதிய புதிய கோணத்தில் உருவாக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டியது என்பதை இப்படங்களை பார்த்தவர்களுக்கு புரியும்.

இரண்டாம் நாள் திரைப்பட விழாவில், பியாற்சே திறந்த வெளி அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படம் Reinas, முதலாவது சுவிற்சர்லாந்து - பெரு நாடுகளின் இணைத்தயாரிப்பில் உருவான திரைப்படமும் கூட.

1990 களில் பெருவின் கிளர்ச்சி ஆர்ப்பாட்டங்களின் சூழலிலிருந்து தப்பித்து வெளியேற நினைக்கும் ஒரு குடும்பம், இரண்டு பெண் பிள்ளைகளும், அவர்களின் தாயும் அந்நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமெனில், பிரிந்து வாழும் தந்தையின் ஒப்புதல் வேண்டும். இல்லையேல் நாட்டிலிருந்து வெளியேற அனுமதிக்க மாட்டார்கள். தந்தையுடன் ஆகாது எனத் தெரிந்தும், பிள்ளைகளை கொஞ்சம் கொஞ்சமாக பழகவிடுகிறார் தாய். அப்போது தான் விசா பெறுவதற்கான ஒப்புதலை பெற முடியும் என்பதால். ஆனால் தந்தையுடன் பழகப்பழக பிள்ளைகளுக்கும் பிடித்து போகிறது. ஆக நாட்டைவிட்டு வெளியேறும் விருப்பு பிள்ளைகளுக்கு கொஞ்சமாக கொஞ்சமாக குறையத் தொடங்குகிறது. 

இன்னமும் ஒரு கிழமைக்குள் தந்தையின் அனுமதி கிடைக்காவிட்டால், புறப்படும் அனைத்து திட்டமும் பாழாகிவிடும் எனும் நிலையில் அந்த ஒரு கிழமைக்குள் என்ன நடக்கலாம் என்பதே கதை. 

இயக்குனர் Kaudia Reincke இன் முதல் முழுநீள புனைவுத்திரைப்படம். பெரு நாட்டில் கோவிட்டுக்கு பின்னர் அவர் படம்பிடிக்கத் தொடங்கியிருந்தார். அப்போதும் அவர் 90 களின் புரட்சியை மீள்நினைவுசெய்தே படம்பிடிக்க முயற்சித்தார். ஆனால் அங்கு நிஜமாகவே அரசின் வல்லாதிக்கத்திற்கு எதிராக மறுபடியும் புரட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்படி இருந்தும், அனாவசிய பதற்றங்களை தவிர்ப்பதற்காக தங்கள் தங்கியிருந்த வீடுகளை மையப்படுத்தி, அவற்றின் உள்ளகங்களிலேயே படம்பிடித்து காட்சிகளை நகர்த்தியிருப்பார் இயக்குனர். 

இயல்பான உரையாடல்கள்,  இரு சிறு பிள்ளைகளின் மிக கச்சிதமான நடிப்புத் திறன் என படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை அதன் காட்சி அமைப்புக்கள் ஏற்படுத்திய தாக்கம் அழகானது. இயல்பானது. நிச்சயம் நீண்ட தூரத்திற்கு செல்லக் கூடிய ஒரு திரைப்படக் கலைஞர். 

இணைப்பு புகைப்படங்கள் :

https://www.locarnofestival.ch/news/2024/daily/stacey-sher-the-uphill-battles-are-the-ones-worth-fighting.html

https://www.locarnofestival.ch/news/2024/daily/it-s-imperfections-that-make-your-artwork-truly-yours-klaudia-reynicke.html

-  லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா செய்தியாளர்கள் 

 

 

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction