உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரழப்புகளை சந்தித்த நாடாக மாறிப்போனது அமெரிக்கா. அதன்பிறகு லத்தின் பிரேசில் அந்த இடத்தை எடுத்துக்கொண்டது. தற்போது இந்தியா இரண்டாம் அலைக் கொரோனாவில் பிணக்குவியல்களின் தேசமாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவை கையாளத் தவறிய அதிபராக டிரெம்ப்பும் உலக நாடுகளின் தலைவர்களில் கொரோனாவை மிக மோசமாகக் கையாண்டவர் என்ற அவப்பெயர் மோடியையும் வந்தடைந்துள்ளன. உலகின் பலநாடுகள் தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்தி வரும் நிலையில், தற்போது அமெரிக்க தனது கட்டுபாடுகளை மெல்ல மெல்ல தளர்த்தியிருக்கிறது.
அரசுடன் கைகோர்த்து கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்பாட்டுடன் இருந்து எதிர்கொண்டு கட்டுப்படுத்திய அமெரிக்கார்கள் தற்போது, சகஜமான வாழ்க்கைக்கு திரும்பித் தொடங்கியிருக்கிறார்கள். அதன் காரணமாக, ஹாலிவுட்டின் இதயமான கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 14 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.
இதை ஒரு விழாவாக் கொண்டாடிய திரைத்துறையினர், ‘மீண்டும் பெரிய திரை’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிகழ்ச்சியில் ஹாலிவுட்டின் மூத்த ஆக்ஷன் நாயகனும் முன்னாள் கவர்நருமான அர்னால்ட் ஸ்வாஸ்னேகர், நடிகர் சாம் ரிச்சர்ட், நடிகை மேத்திக்கியூ உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டு 50 சதவீத இருக்கை இடைவெளியில் அமர்ந்திருந்த ரசிகர்கள் பெரும் ஆராவாரத்துடன் திரையிடலை ரசித்தனர்.