free website hit counter

உறுதியானது ‘தல’ பொங்கல்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 2022-ன் பொங்கல் வெளியீடு என்பதை தன்னுடைய சமூக வலைதள அறிவிப்பு மூலம் தயாரிப்பாளர் இன்று அறிவித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தில் தந்தை பாசத்தை மையப்படுத்திய நிலையில் ‘வலிமை’யில் ஒரு தாய்க்கும் மகனுக்குமான பாசத்தை முன்னிருத்தும் படம் எனத் தெரிய வந்துள்ளது. இதில் அஜித் தன்னுடைய பைக் ஸ்டண்ட் திறமைகளைக் காட்டியுள்ளார். தற்போது படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, புகழ் போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று கார்த்திகேயா பிறந்த நாளை முன்னிட்டு வலிமை குழுவினர் சார்பாக புதிய போஸ்டர் வெளியிட்டனர். இதனால் வலிமை வரும் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு வெளியாகுமோ என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளத்தை ‘தல பொங்கல்’ என்று சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: