ஆஸ்திரேலியாவில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர், உலகம் முழுவதும் பல மொழிகளில் பிரபமான சமையல் நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’. இது தற்போது
தமிழ், தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தமிழ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதியும், தெலுங்கு நிகழ்ச்சியை தமன்னாவும் தொகுத்து வழங்கி வந்தார்கள். ஆனால், தெலுங்கு நிகழ்ச்சியிலிருந்து தமன்னா திடீரென நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அனுசுயா தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.
என்ன காரணத்துக்காக தமன்னா அதிரடியாக நீக்கப்பட்டார் என்ற காரணத்தை, தமன்னாவுக்கே தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவிக்காமல், நீக்கிவிட்டதாம். இதனால் தமன்னா தனது வழக்கறிஞர் மூலம் தொலைக்காட்சி நிர்வாகம் மீது வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அந்த வழக்கின் மனுவில் தமன்னா கூறியிருப்பதாவது: “ நான் தொகுத்து வழங்கி வந்த மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்சிக்கான சம்பள பாக்கி இன்னும் கொடுக்கப்படவில்லை. இதனால் எனக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எனது ஊதியத்தைப் பெற இந்த வழக்கை தொடக்கவேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.