free website hit counter

சுவிஸ் நாட்டில் பனிச் சறுக்கு விளையாடும் சமந்தா !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாக சைதன்யாவைப் பிரிந்த பிறகு முழு வீச்சில் தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார் சமந்தா தற்போது நயன் தாரா தயாரிப்பு மற்றும் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இதற்கிடையில், ‘புஷ்பா’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றீயா..’ பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியதால், அதன்மூலம் பரபரப்பான பேசுபொருளாக மாறினார். அந்தப் பாடலின் வெற்றியால் பல புதிய படங்கள் ஒப்பந்தமாகியிருக்கிறார். என்றாலும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

சுவிற்சர்லாந்து திரைப்பட விழாவில் ஈழத்து அகதி முகம் !

தற்போது திரையுலக பரபரப்பு அனைத்தையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு தனது தோழிகளுடன் சுவிட்சர்லாந்துக்கு பனிச் சறுக்கு விளையாட Verbier, Switzerland என்கிற பனிப்பூங்கா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பனிமலையில் விளையாடும் தனது படங்களையும் பனியில் சறுக்கிச் செல்லும் தனது வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை மில்லியன்களில் அள்ளி வருகிறார். ஒரு வாரம் சுவிஸில் இருந்துவிட்டு சென்னை திரும்ப இருப்பதாகக் கூறியிருக்கும் சமந்தா, விவாகரத்துக்குப் பின் ஒப்புக்கொண்ட யசோதா மற்றும் அரேஜ்மெண்ட் ஆப் லவ் ஆகிய படங்களில் நடிக்க இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

சமந்தா பனியில் சறுக்கிச் செல்லும் காணொளி இதோ :  https://www.instagram.com/p/CY_1VGqhaDL/

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: