free website hit counter

புதிய புகைப்படம் வழியே தங்கைக்கு ஆதரவு தந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்! புலம்பியழும் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனவரி 17-ஆம் தேதி இரவு நடிகர் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும்
தனித்தனி அறிக்கை மூலம் தங்களுடைய திருமணம் விவாகரத்தினை அறிவித்தனர். பிரிந்து செல்வது எனும் அவர்களுடைய முடிவு குறித்து அவரவர் குடும்ப உறுப்பினர்கள் இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், ஐஸ்வர்யாவின் தங்கையும் ரஜியின் இளைய மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பக்கத்தில் உள்ள புரொஃபைல் படத்தை மாற்றி தனது அக்கா ஐஸ்வர்யாவுக்கு தன் ஆதரவை வெளிக்காட்டியிருக்கிறார்.

சிறு வயதில் அக்கா ஐஸ்வர்யா மற்றும் அப்பா ரஜினிகாந்த் உடன் இருக்கும் புகைப்படம் அது. இதுவரை அந்தப் படம் பொதுவெளியில் வெளியாகவில்லை. அதனால் தற்போது ரசிகர்களிடையே அப்படம் வைரலாகி வருகிறது. சௌந்தர்யாவும் முதல் கணவரை பிரிந்து பரபரப்பு கிளப்பியவர் தான். 2016-ல், தனது முதல் கணவர் அஸ்வின் ராம்குமாரிடமிருந்து பிரிந்த செளந்தர்யா, 2019-ல் விசாகன் வணங்காமுடியை இரண்டாவதாக மணந்தார். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லாததால் விவாகரத்து அத்தனை வலி கொண்டதாக இல்லை எனக் கூறப்பட்டது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004-ல் திருமணம் செய்துக் கொண்டனர். 2006-ல் அவர்களுக்கு முதல் மகனாக யாத்ராவும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் இரண்டாவது மகன் லிங்காவும் பிறந்தனர். முதல் மகன் வளர்ந்து தற்போது பதின்ம வயதை எட்டியிருப்பதால், இது அவனை மிகுதியாக பாதிக்கும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். இது கால தாமதமாக எடுக்கபட்ட முடிவு, இருவரில் ஒருவரிடம் கூடவா தீர்வு இல்லாமல் போய்விட்டது என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction