free website hit counter

கமலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சின்னத்திரையில் பலகுரல் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவா கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் பிளாக் பஸ்டர் ஆகி , கடந்த ஆண்டின் வசூல் ராஜா என்று பெயரெடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பதோடு ஒதுங்கி விடாமல் எஸ்.கே.புரடக்‌ஷன்ஸ் எனும் தனது நிறுவனத்தின் மூலம் படங்களை தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். இதுதவிர பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார்.

தற்போது அவர் டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமாருடன் ஒரு படம், பிச்சைக்காரன் பட இயக்குனர் சசியுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். மேலும் இந்த ஆண்டு டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் .

இதில் டான் மற்றும் அயலான் படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டான் படம் வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கமலின் ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இது குறித்து ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் கமல்,சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட மூவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து புதிய கூட்டணி குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: