free website hit counter

மீண்டும் வம்பை விலை கொடுத்து வாங்க தயாராகும் சமந்தா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாலிவுட்டின் பிரபல இரட்டை இயக்குநர்கள் ராஜ் - டிகே இணைந்து இயக்கிய ‘தி பேமிலிமேன்’ வெப் சீரிஸின் இரண்டாம்

பாகத்தில், இலங்கைப் பெண்ணாக நடித்திருந்தார் சமந்தா. அத்தொடர் மிகப் பெரிய விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால், அத்தொடரில் சிறப்பாக நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது சமந்தாவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தனது கணவர் நாக சைதன்யாவைப் பிரிந்த பிறகு, ‘புஷ்பா’ திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடிய சமந்தா, தற்போது ‘யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அடுத்தபடியாக மீண்டும் ராஜ் _ டிகே இயக்கும் இந்தி வெப் தொடரில் நடிப்பதற்கு சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகப் பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சமந்தா மீண்டும் வம்பை விலை கொடுத்து வாங்க தயாராகிவிட்டதாக நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள்.

 
 

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: