free website hit counter

ஹாலிவுட் சண்டை இயக்குனரின் பாராட்டில் சமந்தா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சமந்தா தற்போது கதையின் நாயகியாக நடித்துவரும் படம் ‘யசோதா’. இது நவீன காலத்தின்
பிரதியாக உருவாகி வருவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் சமந்தாவுக்கு சண்டைக்காட்சிகள் உள்ளன. இந்தப் படத்துக்காக ஹாலிவுட் சண்டைப்பயிற்சி அமைப்பாளர் யானிக் பென் ( Yannick Ben ) அமர்த்தப்பட்டுள்ளார். இவர், ஹாலிவுட் படங்களான 'Transporter 3', 'Project 7', 'Paris By Night Of Living Dead', 'City Hunter', Christopher Nolan படங்களான 'Inception', 'Dunkirk', பாலிவுட்டில் ஷாருக்கானின் 'Raees', சல்மான் கான் நடிப்பில் 'Tiger Zinda Hai', டோலிவுட்டில் பவன் கல்யாண் நடிப்பில் 'Attarintiki Daredi', மகேஷ் பாபு நடிப்பில் 1 - Nenokkadine முதலான படங்களுக்கு சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார்.

இவர் நடிகை சமந்தா உடன் முன்னதாக 'Family Man 2 இணைய தொடரில் பணியாற்றியுள்ளார். தற்போது யசோதா படம் மூலம் சமந்தாவுடன் மீண்டும் இணைந்துள்ளார். இதுகுறித்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில்: “யானிக் பென் இயக்கத்தில் சமந்தா உள்ளிட்டோர் நடித்த முக்கிய ஆக்‌ஷன் காட்சிகளை 10 நாட்கள் படமாக்கியுள்ளோம். 3 விதமான செட்களில் படமாக்கிய அந்த சண்டைக்காட்சிகளில் சமந்தா அசாத்தியமான ஆக்‌ஷன் காட்சிகளை நடிக்க கடுமையாக உழைத்துள்ளார். யானிக் பென், சமந்தாவின் திறமையை பெரிதும் பாராட்டியுள்ளார்.” என்றார்.

தற்போது கொடைக்கானலில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்திய திரைப்படங்களில் நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களைப் போல் அல்லாமல் இப்படத்தில் ஆக்‌ஷன் எபிசோடுகள் மிக அபாரமாக இருக்கும் என்கிறார் இயக்குநர். தவிர, ஹைதராபாத்தில் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 கோடி செலவில் கலை இயக்குனர் அசோக் அந்த செட்டை வடிவமைத்துள்ளார். மே 1ஆம் தேதியுடன் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction