free website hit counter

ரஜினிக்கான கதையில் வெற்றி மாறன் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கடந்த ஜூன் 19 சென்னையிலிருந்து தோகா வழியாக அமெரிக்கா சென்றார். முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அமெரிக்காவின் ராசெஸ்டர் மாயோ மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

அங்கே தன்னுடைய உடலில் ஆண்டிபாடி அளவு, சிறுநீரகச் செயல்பாடு, கல்லீரல் செயல்பாடு உட்பட முக்கிய மருத்துவ பரிசோதனைகளை முடித்து மருத்துவர்களின் அறிவுரியைப் பெற்றுக்கொண்டார். பின்னர், அமெரிக்காவிலிருந்து மீண்டும் தோகா வழியாக நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். அவரது வருகையையொட்டி ஊடகங்கள் தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்ததால் விமான நிலைய வாசல் பகுதியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

அவர்களில் சிலர் “தலைவா.. அண்ணாத்த படத்துக்கு வெயிட்டிங்..” என்றும் சிலர் “ அண்ணாத்த...!” என்று கத்தினார்கள். அங்கே வந்திருந்த 50-க்கும் அதிகமான ரசிகர்களைப் பார்த்து கையசைத்து அங்கிருந்து விடைபெற்ற வீட்டுக்கு புறப்பட்டார். அவர் இரண்டு வார ஓய்வுக்குப் பிறகு அண்ணாத்த படத்தில் எஞ்சியுள்ள ஒரு பாடல் காட்சியில் நடிக்கப் போகிறார். அதன் பின்னர் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் ஈடுபட இருக்கிறார்.

ரஜினி நடிக்கும் 169 வது படத்தை தேசிங் பெரியசாமியும், 170 வது படத்தை அவருடைய மருமகன் தனுஷும் இயக்கப்போவதாக தகவல்கள் கிடைக்கின்றன. தனுஷ் இயக்கவிருக்கும் படத்துக்கான திரைக்கதை விவாதம் தற்போது நடந்து வருகிறது. வெற்றிமாறனும் அந்தக் கதை விவாதக் குழுவில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction