free website hit counter

தீபாவளியில் மோதும் அஜித் - ரஜினி !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அப்டெட் கேட்டு ரசிகர்கள் நொந்துபோன‘வலிமை’ படத்தின் முதல் தோற்றம் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை விரைவில் வெளியாக உள்ளன. அதில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்க உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி, ஒரே நேரத்தில் ரஜினி, அஜித்தின் படங்களை வெளியிட இரு தரப்புமே உறுதி செய்திருக்கிறார்கள். இது இரண்டு தரப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைத் தந்திருக்கும் நிலையில், விநியோகஸ்தர்களிடம் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 976 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் ‘ஏ கிளாஸ்’ எனப்படும் கேளிக்கை வரி அதிகமாக வசூலிக்கப்படும் முதல் தரமான திரையரங்குகளின் எண்ணிக்கை 538 மட்டுமே. இவற்றுக்குத்தான் குடும்பப் பார்வையாளர்கள் வருவார்கள். ஒரு மாஸ் கதாநாயகரின் படம் வெளியாகும்போது இந்த 538 திரையரங்குகளுமே அதற்கு புக் ஆகிவிடும்.

‘கிளாஸ் பி’ என்ற அடுத்த தர நிலையில் இருக்கும் திரையரங்குகளுக்கே மற்ற படங்கள் புக் ஆகும். இந்நிலையில் இரண்டு படங்களும் ஒரேநேரத்தில் வந்தால், அஜித் படம் அளவுக்கு ரஜினி படத்துக்கு ‘ஏ கிளாஸ்’ தியேட்டர் கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதால் தலையைப் பிய்த்துக்கொண்டு இருக்கிறார்களாம். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction