free website hit counter

வைரமுத்துவுக்கு விருது வேண்டாம் - வெகுண்டு எழுந்த நடிகை பார்வதி திருவோத்து!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2021-ம் ஆண்டிற்கான ஒ.ன்.வி. குறுப்பு தேசிய விருது தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் #மீடூ (#MeToo) இயக்கத்தின் வழியாக, பாடகி சின்மயி உட்பட 17 பெண்கள் வைரமுத்துவை பாலியல் சீண்டலுக்கு தூண்டினார் என கடந்த சில ஆண்டு ஆண்டுகளுக்கு முன் குற்றம் சாட்டினர். அப்படிப்பட்ட ஒருவருக்கு நீங்கள் எப்படி , புகழ்பெற்ற ‘ஒ.ன்.வி. குறுப்பு தேசிய விரு’தை வழங்குவீர்கள் என்று கேட்டதுடன் நில்லாமல், வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டால் அது அந்த விருதுக்கே இழுக்கு என்றும் கேரள கலைத்துறைப் பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் நடிகையுமான பார்வதி திருவோத்து கூறியிருக்கிறார்.

மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதினைப் பெற்றார் வைரமுத்து !

மரியான், பூ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றவர் பார்வதி. வைரமுத்துவுக்கு ‘ஒ.ன்.வி. குறுப்பு தேசிய விருது’ நேற்று அறிவிகப்பட்டதும். மலையாள தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானதும் விருதுக் குழுவின் நடுவர்களை தொடர்புகொண்ட நடிகை பார்வதி ‘இந்த தேர்வு முற்றிலும் தவறானது மட்டுமல்ல, இது கவிஞர் ஓ.என்.வி.குறுப்புக்கு அவமரியாதையும்தான்’ என்று தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

காற்று இல்லாமல் மனிதன் இறப்பது மிகப்பெரிய கொடுமை : சூப்பர் ஸ்டார்

மேலும் தனது சமூக வலைதளப் பக்கத்தில்: ‘ஓ.என்.வி எங்கள் பெருமை. ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவர் மலையாள இலக்கியத்துக்கு அளித்த பங்களிப்பு யாருடனும் ஒப்பிடமுடியாதது. இது நம் மலையாளக் கலாச்சாரத்தை எவ்வாறு வளர்த்தது. அந்த விருதை சிறுமைபடுத்த வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு வைரமுத்துவின் ஆதரவாளர்கள் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் முற்றுகையிட்டு, தமிழ் நாட்டிலிருந்து இலக்கியத்துக்காக நோபல் பரிசுபெறும் தகுதிகொண்ட சிலரில் வைரமுத்து ஒருவர். அவரது ஒரு கவிதையையாவது நீங்கள் படித்திருக்கிறீர்களா? முதலில் உங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதி ஒட்டினை எடுத்துவிட்டு புரட்சி செய்யுங்கள் பார்க்கலாம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு வைரமுத்துமேல் குற்றம் சாட்டுவதின் பின்னால் ஆண்டாள் சர்ச்சை மட்டுமே இருக்கிறது. பார்வதி நீங்களும் இந்தக் கூட்டத்தில் சிக்கிவிட்டீர்களா?” என்று கேட்டுள்ளார்கள்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction