free website hit counter

கொரோனா தொற்றுக்குள்ளான திரைப் பிரபலங்கள் - நடிகர் பாண்டு மறைவு !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வீச்சின் பாதிப்பு தமிழகத்திலும் பரவத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதில் திரையுலக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் ம் அடுத்தடுத்துஉயிரிழந்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு (74) இன்று அதிகாலை காலாமாகியுள்ளார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி குமுதா தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

இது இவ்வாறிருக்க, தமிழ் நடிகையும் பாடகியுமான நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கடந்தவாரம் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டேன். எனது நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் என்னை கவனித்து வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி. கொரோனாவிலிருந்து தொடர்ந்து குணமாகி வருகின்றேன். இது மோசமான கொரோனா கால நெருக்கடி. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: