website analysis

வீழா வீரா... ஓம் படத்தின் பாடல் வெளியானது!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தனுஷ் நடிக்கும் ஓம் படத்தின் அடுத்த பாடல் வெளியானது.

நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை தனுஷின் வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ’அலாக்கா லோவா' சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து வெளியான மம்மூட்டி கிளிம்ஸ் விடியோவும் கவனம் பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ’வீழா வீரா’ இன்று வெளியாகியுள்ளது.

அருண் ஸ்ரீநிவாசன் எழுதிய இப்பாடலை சாய் அபயங்கர், திப்பு ஆகியோர் பாடியுள்ளனர்.

ஓம் திரைப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில் ஜெயிலர் மற்றும் சீன் திரைப்படங்களின் வெளியீட்டால் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற நவ. 20 அன்று இப்படம் வெளியாகவுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்