சூரியின் நடிப்பில், இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில், வெளிவந்த மண்டாடி திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
மீனவர்களின் வாழ்க்கைச் சமூகமும், அச்சமூகத்தில் நடைபெறும், படகுப்போட்டியையும் கதைக்களமாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம், இந்தியாவில் மட்டும் தற்போது 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செப்டம்பர் 30ம் திகதி வரை மண்டாடி திரைப்படம் உலகளவில் 140 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மண்டாடி திரைப்படம் இந்தியாவில் மட்டும் மொத்தமாக 113 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தெரிவித்தது.
ஏற்கனவே வசூல் சாதனை படைத்திருந்த முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக மண்டாடியின் வசூல், சூரியின் திரைவாழ்க்கையில் வரலாற்று வெற்றிப்படமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.