சமீபத்தில் பல இசையமைப்பாளர்கள் பங்கேற்ற புத்தம் புது காலை விடியாதா... தமிழ் ஆந்தாலஜி படத்துக்காக அதன் இசைக்கானோலி ஒன்றை அமேசான் ஓடிடி அறிவித்தது,
இந்த பாடல் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில் இந்த ஆல்பம் குறித்து இசை ஆர்வலர்கள் பாராட்டைப் பொழியத் துவங்கியுள்ளனர். குறிப்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து பாடிய 'புத்தம் புதுக் காலை விடியாதா...' பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஒரிஜனல் பாடலை இங்கே காணவும்:
சமீபத்தில், இப்பன்முகத் திறமை கொண்ட கலைஞர், IIT மெட்ராஸின் ஆண்டு விழாவான சாரங்கில் மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் உரையாடி, டைட்டில் டிராக் உருவாகிய விதம் மற்றும் அவரது இசை உலகப் பயணம் குறித்து கலந்துரையாடினார். உரையாடலின் முடிவில், IIT மெட்ராஸின் மியூசிக் கிளப் மாணவர்கள், Amazon Original தொடரின் டைட்டில் டிராக்கின் கவர் பதிப்புடன் ஜிவி பிரகாஷை ஆச்சரியப்படுத்தினர்.
IIT மெட்ராஸ் இசை மாணவர்களின் கவர் பதிப்பை இங்கே காணலாம்: இணைப்பு
மாணவர்கள்-பதிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ஜி.வி.பிரகாஷ் குமார், “பாடலின் மறுவடிவமைப்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது மிகவும் சிறப்பாக வழங்கப்பட்டது மற்றும் இசையமைப்பு மிகவும் அழகாகவும், மிகவும் தொழில்முறையாகவும் இருந்தது. பாடலில் கிட்டார் டிராக் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பாடலை நானே ப்ரோக்ராம் செய்தது போன்ற எண்ணத்தை எனக்கு வழங்கியது” என்கிறார்.