free website hit counter

ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கும் வைத்தார்கள் ஆப்பு!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஹிப் ஹாப் தமிழா ஆதி என்றாலே அவரது தாய்மொழிப்பற்று உலகத் தமிழ் ரசிகர்கள் நன்கு அறிந்த ஒன்று.

அவருடைய யூடியூப் பக்கம் சமீபத்தில் காணாமல் அடிக்கப்பட்டது. அதற்குக் காரணம் தமிழ்மொழி குறித்து அவர் வெளியிட்ட ஓர் ஆவணப்படம். இந்தியையும் சமஸ்கிரதத்தையும் திணித்து வரும் பா.ஜ.க, மத்திய தகவல் அமைச்சகம் வழியாக யூடியூப்புக்கு நெருக்கடி கொடுத்து அவருடைய சேனலை நீக்கும்படி செய்துவிட்டார்கள். ஆனால், அதுபற்றியெல்லாம் அவர் யூடியூபிடம் கெஞ்சிக்கொண்டிருக்காமல் தன்னுடைய அடுத்த சேனலை தொடங்கிவிட்டார்.

படங்களில் ஒரு பக்கம் நடித்துகொண்டு, இன்னொரு பக்கம், தனியிசைப் பாடல்களை இசையமைத்தும் வருகிறார். தற்போது அவர் நடித்துவரும் ‘சிவகுமாரின் சபதம்’ படத்திலிருந்து மூன்றாவது பாடலாக ‘நெருப்பா இருப்பான்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இது அவரது தற்போதைய அரசியல் பழிவாங்கல் சூழ்நிலைக்கு ஒத்துப்போகும் ஒன்றாக உள்ளது.

இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா பாடியுள்ளார். படத்தில் கதாநாயகி (மாதுரி ) கதாநாயகனை (ஆதி) காதலித்து, அவரது அழகை மற்றும் போற்றத்தக்க பண்பை, நினைத்துருகி பாடுவதாக  வரும்  பாடல் இது. முதல் இரண்டு பாடல்கள் போலவே, இப்பாடலும் ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction