ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில் குடும்பத்தைத் துறந்து இன்னுயிரீந்த நூற்றுக்கணக்கான பெண் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக சமந்தா கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தனர்.
சமந்தாவுடன் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தமிழ் நடிகர்கள் சிலரும் நடித்திருந்த தி பேமிலி மேன் 2 தொடருக்கு தமிழ்நாட்டிலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையில் ‘தி பேமிலி மேன்’ தொடரின் 3-வது பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்று சர்ச்சை கிளம்பியது.
விஜய் சேதுபதி எப்படி சம்மதம் தெரிவித்தார் என்று மீண்டும் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 3 தொடர் குறித்து விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியதாவது. “நான் ‘தி பேமிலி மேன் 2’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடிப்பது உண்மைதான். ஆனால், இந்தத் தொடரில் ஷாஹித் கபூர் ஹீரோ, நான் வில்லனாக நடிக்கிறேன். மனோஜ் பாஜ்பாயுடன் சேர்ந்து எந்தத் தொடரிலோ, படத்திலோ நான் நடிக்கவில்லை. ஆனால் ‘தி பேமிலி மேன் 3’ தொடரில் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயமாக சேர்ந்து நடிப்பேன். அது திரைக்கதை தயாராகும்போதுதான் அது என்ன கதை என்பது தெரியவரும்.” என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார்.