free website hit counter

துரந்தர் - 2 : அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

துரந்தர் - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா தார் இயக்கத்தில் பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் 19ஆம் தேதி துரந்தர் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.

பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், தீவிரவாத நடவடிக்கைகளை மையப்படுத்தி உருவாகியிருந்த முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து வெளியான இதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் மட்டுமே ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. துரந்தர் - 2 திரைப்படம் ரூ. 2000 கோடியைக் கடந்து வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், துரந்தர் - 2 திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் மே 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துரந்தர் முதல் பாகம் ஜப்பானிய மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு ஜப்பான் நாட்டில் ஜூலை 10 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula