free website hit counter

சர்ச்சை விளம்பரம்: ஆமீர் கானை சாடிய பி.சி.ஸ்ரீராம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மகிழுந்து மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான டயர் தயாரிக்கும் நிறுவனம் ஆமீர் கானை விளம்பரத் தூதுவராகக் கொண்டு

விளம்பரம் ஒன்றைத் தயாரித்து, தீபாவளியை முன்னிட்டு அதைத்  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியது. அந்த விளம்பரத்தில் ஆமிர் கான் பேசும் இரண்டுவரி வசனம் இதுதான்.., ‘சாலைகள் பட்டாசு வெடிப்பதற்காக அல்ல, அவை  கார்கள் செல்வதற்காக’. இந்த வசனம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் ஆமிர் கானுக்கும், அந்த டயர் நிறுவனத்துக்கும் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

தவிர, பட்டாசு வெடிப்பதற்கு எதிராக ஆமீர் கான் பேசுவதாக இதை மதப் பின்னணியில் விமர்சிக்கத் தொடங்கினார்கள். கர்னாடகா அரசியல்வாதி ஒருவரும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ் சினிமாவின் கேமரா கடவுள் என்று வருணிக்கப்படும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைப் பதிவில்  ஆமீர் கானை கண்டித்துள்ளார். அதில் தனது பதிவில்:

 “ மிகவும் பரிதாபம். பிரிவை உருவாக்கி கவனத்தை ஈர்க்கும் விளம்பர உத்தி, பிரிவினையை ஏற்படுத்தக்கூடியது. இது போன்ற முட்டாள்தனங்களை நாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற மோசமான சிந்தனைகளை முன்வைக்கும் மனங்களுக்கு அன்பாலான சிகிச்சை தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சூழியல் ஆர்வலர்கள், ‘அமீர் கான்’ விளம்பரத்தில் தவறேதும் இல்லை. பட்டாசு வெடிப்பால் ஆண்டுதோறும் 1500 கோடி ரூபாய் வீணாகிறது. காற்று மாசு 16 சதவீதம் அதிகரிப்பதுடன், ஆண்டின் மொத்த காற்று மாசில் அது 120 நாட்கள் வரை கரைந்து வளி மணடலத்தில் பயணிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: