free website hit counter

என்ன க்யூட்டான 'துணிவு' இந்தப்பெண்ணுக்கு!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

How old are you? திரைப்படத்தில் வருவது போல நிஜத்திலும் வயதைப்பற்றி தான் அக்கறைப்படப்போவதில்லை எனும் துணிவில் நடித்து வரும் மஞ்சு வாரியர் தற்போது பிரபலமாகிவருகிறார்.

பொங்கல் வெளியீடாக வந்த துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்து அசத்தியிருக்கும் இவர் மலயாள திரையுலகில் முன்னனி நடிகையாக வலம்வருவது அறிந்ததே.

இந்நிலையில் வருகின்ற 20ஆம் திகதி வெளியாகப்போகும் மஞ்சு வாரியரின் ஆயிஷா எனும் புத்தம்புதிய மலயாள-அரபு திரைப்படத்தின் பாடல் காணொளியும் முன்னோட்டமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சோலோ கதையான ஆயிஷா வில் வரும் பாடல் காணொளி ஒன்று கடந்தாண்டு வெளிவந்தபோது; அதில் தோன்றி நடனமாடி இருக்கும் மஞ்சுவாரியரின் வயது 44 என்றபோதும்; இந்த வயதிலும் க்யூட்டான நடனம் ஆச்சரியம் என்றும்; மனதளவில் அவர் இன்னும் இளமையானவர்தான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

பிரபு தேவாவின் மெய்சிலிர்க்கவைக்கும் நடன இயக்கத்தில் எளிமையாகவும், எளிதாகவும் இளமையாகவும் அந்த பாடல் காட்சியில் மஞ்சு வாரியார் நடனமாடியதே இவ்வாறு ஆச்சரியப்படுத்தி பேச வைத்திருக்கிறது என்கிறார்கள்.

ஆயிஷா முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் என்பதால் உலக சினிமாவாக பார்க்கப்படுவதோடு படத்தின் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க அவருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா உள்ளிட்ட இந்திய கலைஞர்களுடன் பல சர்வதேச நாட்டு கலைஞர்களும் நடித்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரேபிய மொழியில் ‘ஆயிஷா’ வெளியாக உள்ளது.

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction