இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘நேர்கோண்ட பார்வை’ படத்தில் நடித்த தல அஜித் மீண்டும் அவரது இயக்கத்தில் நடித்துள்ளார்.
அஜித்தின் ரேஸிங் மற்றும் அவருடைய பைக் ஸ்டண்ட் திறமைகளைக் காட்டவுள்ள ‘வலிமை’ திரைப்படம் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் ஹீமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால், நிஜ வாழ்விலும் உண்மையான கதாநாயகியாக வலம் வரும் சாதனைப் பெண்மணி ஒருவரைச் சமீபத்தில் சந்தித்துள்ளார் அஜித்.
அட்லீ இயக்கத்தில் ‘லயன்’ ஆகிறார் ஷாருக்கான் !
சமீபத்தில் டெல்லி சென்றிருந்த அஜித், அங்கு தாஜ்மஹாலில் தனது ரசிகர்கள் பலருடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், உலகம் முழுவதும் பைக்கிலேயே தனியாக பயணம் செய்த மாரல் யசார்லூவை டெல்லியில் சந்தித்து உரையாடியிருக்கிறார். இதுவரை 7 கண்டங்களையும் 64 நாடுகளையும் பைக்கிலேயே சுற்றிய மாரல் யசார்லூ தற்போது டெல்லி வந்துள்ளார். எதிர்காலத்தில் பைக்கிலேயே உலகம் முழுக்க பயணம் செய்ய திட்டமிட்டுள்ள அஜித், அவரது ஆலோசனைகளையும், டெல்லி அனுபவத்தையும் கேட்டறிந்தார். இந்தப் புகைப்படத்தையும் தகவலையும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தற்போது ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.
ஊடகங்களை வைத்துச் செய்யும் சூர்யா - ஜோதிகா தயாரித்துள்ள ‘ரா ரா’
வலிமை படத்தில் இடம்பெறும் பைக் சாகசக் காட்சிகளுக்காக படக்குழு கடந்த ஆகஸ்ட் 20- ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதிவரை ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு, படத்தில் மட்டுமல்லாமல் தனியாகவும் அஜித் பைக்கில் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அதோடு, சென்னை வந்தவுடன் ஹைதராபாத்திலும் அஜித் நடிகர் நவ்தீப்புடன் பைக் ரேஸில் கலந்துகொண்டார். அந்தப் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அஜித் மீண்டும் ஒரு முழு நேர பைக் பிரியராக மாறியுள்ளார். இது அவரிடம் தீவிரமாக ஏற்பட்டுள்ள மாற்றம் என அவரது அபிமானிகள் தெரிவித்துள்ளனர்.