free website hit counter

ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஒரு தமிழ்ப் பெண் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ராகுல் பிரீத் சிங் ஆகியோர் பாலிவுட்டில் வரிசையாக படங்களில் நடித்து வருகின்றனர்.

தற்போது தெலுங்கில் இளம் கதாநாயகியாக வலம்வரும் தமிழ்ப் பெண்ணான நபா நடேஷ் அவர்களை போலவே தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார்.

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண்ணான இவர், கன்னடத்தில் கடந்த 2015-இல் வஜ்ரகயா என்கிற படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். தாய்மொழியான தமிழ் தவிர, புகழிட மொழியான கன்னட வழியில் பயின்றதால், பெங்களூருவில் புகழ்பெற்ற நடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக முறைப்படி நடிப்பு கற்றுக்கொண்டு நடிக்க வந்திருக்கிறார்.

கன்னடத்தில் அறிமுகப்படுத்துக்குப் பிறகு படங்கள் இல்லாவிட்டாலும் தெலுங்கு படவுலகில் தரமான நடிகர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். கடந்த இரண்டரை வருடங்களில் தெலுங்கில் அவர் நடித்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மட்டுமே 275 கோடி. மேலும் இந்தியில் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இளம் முன்னணி நடிகர் நிதினுடன் நபா நடேஷ் இணைந்து நடித்துள்ள மேஸ்ட்ரோ திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்தநிலையில் தற்போது முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் நபா நடேஷ். ஆனால் திரைப்படத்தில் அல்ல.. திரைப்படங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்று வரும் வெப்சீரிஸில். பாலிவுட் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் தான் அவருக்கு ஜோடியாக தனி நாயகியாக நடிக்க ஆடிஷனில் சிறப்பாக நடித்து தேர்வாக இருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நபாவுக்கு இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து ஒரு வாய்ப்பு கூட வரவில்லை என்பதுதான்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: