free website hit counter

சமந்தாவின் ‘யசோதா’ ரிலீஸ் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்ணனி நாயகியாக வலம் வருபவர் சமந்தா. தன்னுடைய தனிச்சிறப்பு மிக்க நடிப்பை வெளிப்படுத்தி, உலகத் தமிழர்கள் மத்தியில் கண்டனத்துக்கு உள்ளான ‘ஃபேமிலிமேன் 2’தொடர் மூலம் சர்வதேச கவனத்தைப் பெற்றார்.

இந்நிலையில் திருமண வாழ்விலிருந்து வெளியேறியபின், சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘யசோதா’ படத்தினை ஸ்ரீதேவி மூவீஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் என்கிற தெலுங்குபடத் தயாரிப்பாளர் பல மொழிகளில் இதனை உருவாக்கி வருகிறார். ஹரி-ஹரீஷ் என்கிற புதுமுகங்கள் இப்படத்தில் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படம் வரும் ஆகஸ்ட் 12 உலகமுழுதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

இது குறித்து தயாரிப்பாளர் கூறும்போது: நடிகை சமந்தா‘யசோதா’படத்தில் நடிப்பில் மட்டுமின்றி சண்டைக்காட்சிகளிலும் அசத்தியுள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படத்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடுகிறோம். மே மாத இறுதியில் படப்பிடிப்பு முடிவடையும். இந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் இந்திய அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்கக்கூடிய கதைக்களத்தை கொண்டுள்ளது. சமீபத்தில் ஒரு பிரமாண்ட செட்டில் ஒரு பெரிய ஷெட்யூலை முடித்துவிட்டு, இன்று கொடைக்கானலில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்கிறோம்"

இப்படத்தில் சமந்தா உடன், வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction