free website hit counter

ரசிகர்களிடம் திட்டு வாங்கும் யாஷிகா !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாஷிகா ஆனந்த் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர்.

தமிழில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தின் அறிமுகமான இவர், பின்னர், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் அதிகமாக அறியப்பட்டார். பட வாய்ப்புகளும் அவருக்கு அதிகரித்தன.

இந்நிலையில் மதுப் பழக்கம் உடையவரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் இவர்தான் காரை ஓட்டினார். அந்த விபத்தில் இவருடன் பயணித்த அவருடைய தோழி விபத்து நடந்த இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில், அவருக்கு தொடர் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தற்போது உடல் நலம் தேறிய யாஷிகா அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் தென்படுகிறார். ஆனால் புதிய பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அமையவில்லை. இந்த நிலையில் யாஷிகா தன்னுடைய திருமணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி பதிவிட்டுள்ளார்

அதில், “நான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அப்பா அம்மா சம்மதம் தெரிவித்து விட்டார்கள். நான் செட்டில் ஆவதற்கான நேரம் இது. நான் சினிமாவை நேசிக்கிறேன். என்ன நடந்தாலும் நான் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன். இது பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ள திருமணம் தான். உங்களின் அனைவரின் ஆசிர்வாதங்களை வேண்டுகிறேன்.கெட்டிமேளம் மிக விரைவில்” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு அவருடைய ரசிகர்கள், ‘விபத்திலிருந்து மீண்ட உங்களை, திருமணம் மேன்மேலும் மீட்டெடுக்கட்டும்’ என்று ரசிகர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்னும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்துகள் தெரிவித்தனர்.

ஆனால்; 3 நாட்களுக்குப் பிறகு ‘எனக்கு திருமணம் எல்லாம் இல்லை. ஏப்ரல் ஃபூல் செய்தேன்’ என்று மறு பதிவிட, கொதித்துபோன ரசிகர்கள்.. ‘விபத்தில் குழம்பிய மூளை இன்னும் தெளியவில்லையா?’ என்பது தொடங்கி யாஷிகாவை அர்சித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: