free website hit counter

எஸ்.கேயுடன் ஜோடி சேர்ந்தார் சாய் பல்லவி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘டான்’.

இதுவொரு ரோம்-காம் வகைப் படம். இந்தப் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பின், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கால்ஷீர் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தை சோனி நிறுவனத்துடன் இணைந்து கமல் தயாரிக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை ஊடகங்களுக்கு உறுதிசெய்யும் விதமாக பிக் பாஸ் அட்டிமேட் படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனை சந்தித்தார். அப்போது கதாநாயகி குறித்து எந்த தகவலையும் படக்குழு வெளிப்படுத்தவில்லை. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி இணையும் முதல் படமாக இது அமைந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை இயக்கி வருபவர் ராஜ்குமார் பெரியசாமி. இதன் மூலம் அவருக்கு சாய் பல்லவியுடன் நல்ல நட்பு உள்ளது. இவரது கதையைக் கேட்டதுமே கால்ஷீட் கொடுத்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சாய் பல்லவி. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். நானியுடன் சாய் பல்லவி இணைந்து நடித்த ஷியாம் சிங்க ராய் படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதுடன். சாய் பல்லவியின் நடனத்துக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: