free website hit counter

நயன்தாராவுக்கு பதிலாக மாதவனின் கதாநாயகி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாதவன் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘மாரா’. இந்தப் படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் ஷிரத்தா ஸ்ரீநாத்.

இவர் தற்போது நயன்தாரா நடிக்க முடியாமல் விலகிவிட்ட படத்தில் அவருக்கு பதிலாக கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வடிவேலுவை வைத்து ‘தெனாலிராமன்’, ‘எலி’ திரைப்படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில்தான் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இயக்குநர் யுவராஜ் சொன்ன கதை சுவாரசியமாக இருந்ததால் உடனே இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டார் என்று அவருடைய மக்கள் தொடர்பாளர் கூறியிருந்தார் தற்போது பாலிவுட்டில் அவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக யுவராஜ் படத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த தேதிகளையும் ஷாருக்கான் படத்திற்குக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், யுவராஜ் தயாளன் இத்திரைப்படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்றும் அவருக்குப் பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: