free website hit counter

சமந்தாவை புரமோட் செய்யும் நயன்தாரா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து, அட்லீ இயக்கும் இந்தி படத்தில் ஷாரூக் கானுடன் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த நயன்தாரா அந்தப் படத்துக்கு கொடுத்திருந்த 20 நாள் கால்ஷீட்டை படக்குழு படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்ததுடன் 1 கோடி ரூபாய் அட்வான்ஸை திரும்பக் கொடுத்தார். இதனால் மும்பையில் இருந்து சென்னை வந்த படத்தின் இயக்குனர் அட்லீ, நயன் மற்றும் விக்னேஷ் சிவனுடன் சமாதானம் பேசி, மொத்தம் 7 கோடி ரூபாய் நயன் தாராவுக்கு ஊதியம் என புதிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி இரண்டாவது வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் அட்லீ ஷாரூக் படத்தில் ப்ளாஷ் பேக் காட்சியில் வரும் கதாநாயகி பற்றி அறிந்து அதற்கு சமந்தாவை அட்லீயிடம் பரிந்துரை செய்துள்ளாராம் நயன் தாரா. சமந்தாவுடன் தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கு நட்பு பலப்பட்டுள்ள நிலையில் விவாகரத்து பெற்றுள்ள சமந்தாவுக்கு கைகொடுத்து உதவ நினைக்கிறாராம். இன்று வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் பார்வையில் சமந்தாவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும்படி கூறியதும் நயன்தாரா தானாம்!

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: