மைனா, கும்கி, கயல் படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரபு சாலமன்.
அவர் தனுஷை வைத்து கடைசியாக இயக்கிய தொடரி படுதோல்வி அடைந்தது. அவர் தற்போது புதிதாக இயக்கவிருக்கும் புபடத்தில் கதையின் நாயகியாக கோவை சரளா நடிக்கவுள்ளார். ஒரு மலைகிராமத்தின் பாட்டி வேடத்தில் நடிக்கவுள்ள கோவை சரளா, தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக பலிவாங்கப் புறப்படும் கேரக்டரில் நடிக்கிறாராம்.
பிரபு சாலமன், தனது வழக்கமான படங்கள் போன்று முழுக்க முழுக்க மலை சார்ந்த பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுது. இந்தப் படத்தில் வன இலாக்கா அதிகாரியாக இரண்டு காட்சிகளில் நடித்துகொடுக்க ராகவா லாரன்ஸ் சம்மதித்து உள்ளாராம்.