free website hit counter

மரகத நாணயம் இயக்குநரிடம் சிக்கிய ஹிப் ஹாப் ஆதி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் சரவணன் இயக்கத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், ஹிப்ஹாப் ஆதி கூட்டணியில் ‘அன்பறிவ’ என்ற வெளியீட்டுக்குத் தயாராகி வரும்  நிலையில், இந்த கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படம், மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர்  சரவணன் இயக்கத்தில், பொழுதுபோக்கு, ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஆயுத பூஜை நாளில் துவங்குகிறது. 

 
பொள்ளாச்சி மற்றும் சென்னை பகுதிகளில், 75 நாட்களில் ஒரே கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.  முன்னணி நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நாயகியாக முன்னணி ஹிரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போது  இயக்குநர் அஷ்வின் ராம் இயகத்தில் உருவாகி வரும் அன்பறிவு திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில்  ஹிப் ஹாப் ஆதி, நடிகர் நெப்போலியன், காஷ்மீரா பர்தேசி  இணைந்து நடித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: