free website hit counter

மீண்டும் ராமேஸ்வரத்தில் முகாமிட்ட இயக்குநர் ராம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இயக்குநர் ராம் தன்னுடைய கடந்த சில படங்களில் ராமேஸ்வரத்தில் சில காட்சிகளைப் படப்பிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தரமணி படத்துக்காக ராமேஸ்வரம் அதன் ஒரு பகுதியாக இருக்கும் தனுஷ்கோடி ஆகிய இடங்களில் பல காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டன. தற்போது நிவின்பாலி - அஞ்சலி ஜோடியாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் துவங்கியது.  அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம், மாநாடு உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம்தான் ராம் இயக்கும் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு,

தனது திரையுலக பயணத்திலேயே மிகப்பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிம்பு. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிக்க இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் பிரபல மலையாள நாயகன் நிவின்பாலி - அஞ்சலி நடிப்பது உறுதியாகியுள்ளது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

கற்றது தமிழ், பேரன்பு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் இயக்கத்தில் நடிக்கிறார் அஞ்சலி. மேலும் இந்தப்படத்தில் சூரி  முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தரமான படங்களை இயக்கி, தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் ராமின் இந்த புதிய படைப்பும் தேசிய விருதை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தனுஷ்கோடி தென் முனையில் எடுக்கப்பட்ட படங்களைத் தான் இங்கே பார்க்கிறீர்கள்

4தமிழ் மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula