free website hit counter

விசா பெற திருமணம் செய்துகொண்டேன் : ராதிகா ஆப்தே அதிரடி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பா.ரஞ்சித் இயக்கிய ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துப் பிரபலமானவர் வட இந்திய நடிகையான ராதிகா ஆப்தே.

ஆனால், அதற்கு முன்பே கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச்செல்வன்’என சில தமிழ்ப் படங்களில் சிறு வேடங்களில் நடித்து இருக்கிறார். இவர் வெள்ளைக்காரர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், தனது திருமணம் குறித்து அவர் பொதுவெளியில் அறிவிக்கவில்லை. தனது கணவருடன் லண்டனிலும் வசித்துவந்தார். தற்போது, பாலிவுட்டின் வெப் சீரிஸ்களில் ராதிகா இல்லாத சீரிஸ்களே இல்லை என்ற அளவிற்கு தற்போது படு பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராதிகா ஆப்தே சமீபத்தில் வட இந்திய தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டேன். ஆனாலும் எனக்கு திருமண முறைகள் மீது நம்பிக்கையே இல்லை. அப்படியென்றால் எதற்காக நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று என்னை கேட்கலாம். நான் இங்கிலாந்து செல்ல விசா வாங்குவதற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டேன். இங்கிலாந்து இளைஞரை மணந்தாலும் இப்போது நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். அவ்வப்போது இங்கிலாந்துக்கு சென்று எனது கணவரை சந்தித்துவிட்டு வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக எனது கணவரை பிரிந்து நான் தனியாக இருக்கிறேன் என்று தகவல்கள் பரவுகிறது. அதில் உண்மை இல்லை. வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விரைவாகவும், எளிதாகவும் விசா கிடைக்கும் என்றனர். அதற்காகத்தான் அவரை திருமணம் செய்து கொண்டேன். அதன்பிறகு எனது வேலையை நான் செய்து கொண்டு இருக்கிறேன். அவசியம் ஏற்படும்போது கணவரை சந்தித்து விட்டு வருகிறேன்” என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். ராதிகா ஆப்தேவின் இந்தப் பேட்டிக்கு இணையவாசிகள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction