நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் படக்குழு தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளது.
இம்மாத துவக்கத்தில் நான்காம் கட்டப் படப்பிடிப்பை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் படக்குழுவினர் முடித்தனர். இங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தவிர இயக்குநர் செல்வராகவனும் வில்லன் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காமெடிக்கு யோகி பாபு இருக்கிறார்.
பெற்றோர் மீது விஜய் அதிரடி வழக்கு !
கோகுலம் ஸ்டுடியோ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு தற்போது சண்டைக் காட்சிக்காக படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். அங்கு இன்று முதல் 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் தற்போது சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
சென்னை இளைஞன் ஹாலிவுட் படத்தில் அறிமுகம்!
‘கே.ஜி.எஃப் 2’, கமல்ஹாசனின் ‘விக்ரம்’ உள்ளிட்டப் படங்களில் அன்பறிவ் எனும் இரட்டை சண்டை இயக்குநனர் சண்டைக் காட்சி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி படப்பிடிப்புக்காக ‘கோ ஏர்’ விமானத்தின் மூலம் டெல்லி செல்லும் விஜய்யின் புகைப்படங்களை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    