free website hit counter

ரஷ்யாவில் பைக் பயணம்: அஜித் அதிரடி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு தெரியாமல் ரஷ்யாவில் ரகசியமாக முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் அந்த சேசிங் காட்சிக்கு பேச் ஒர்க் ஷாட்கள் தேவைப்படலாம் என்பதால், அஜித்தை அங்கேயே தங்கி இருக்க கெட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். அஜித் தற்போது செயிண்ட் பீட்டர்பெர்க் நகரில் தங்கியுள்ளார்.

அப்பா மம்மூட்டியிடம் தோற்றுப்போன மகன் துல்கர்!

‘வலிமை’ படத்தில் அஜித் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமான நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். ரஷ்யாவில் நுழைய விசா அலுவலகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் கோரப்பட்டது. விசா அலுவலகத்தை குஷிப்படுத்தும் விதமாக ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுபூசியை கார் மற்றும் பைக் சேசிங் காட்சியில் பங்கேற்கும் 14 பேர் கொண்ட சேசிங் சண்டைக் குழுவினருக்குப் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சூரரை போற்று’ ஹிந்தி ரீமேக் விவகாரம்: முக்கிய தீர்ப்பு!

சேசிங் காட்சிகளை எடிட்டிங் செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்பின்னர் பேச் ஒர்க் ஷாட்களில் நடித்துக்கொடுக்கும் அஜித், ரஷ்யாவில் சுமார் 5000 கிலோமீட்டர் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே ரஷ்ய பைக் வீரர்கள் சிலரை சந்தித்து அஜித் ஆலோசித்திருப்பதாகவும் வலிமை படக்குழுவிடமிருந்து தகவல். தற்போது ரஷ்யா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வலைய வருகின்றன.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: