free website hit counter

கோவிந்த் வசந்த இசையில்‘உறியடி’ விஜய் குமார்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உறியடி, உறியடி 2 ஆகிய படங்களை எழுதி, இயக்கி, நடித்தார் விஜய்குமார். இதில் உறியடி 2 படம் தூத்துகுடி ஸ்டெர்லைட் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கியதால் தன்னார்வத் தொண்டுநிறுவனங்களில் பாராட்டுகள் அவருக்குக் கிடைத்தன.

அதன்பின்னர், சூர்யாவின் சூரரை போற்று படத்திற்கு வசனம் எழுதி பாரட்டுகளை அள்ளினார். தற்போது, அவர் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்கிறார். அறிமுக இயக்குனரான அப்பாஸ், உறியடி படத்தின் இரு பாகங்களிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். விஜய் குமாருக்கு ஜோடியாக அர்ஷா எனும் நடிகை அறிமுகமாகிறார். இவர்களுடன் நடிகர்கள் சங்கர் தாஸ், அவினாஷ் , கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரிட்டோ இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது!

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: