free website hit counter

ரசிகர்களைக் கலவரப்படுத்திய ரித்திகா சிங்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அறிமுகப் படமான ‘இறுதிச் சுற்று’வில் சென்னை வட்டார வழக்கில் பேசி, அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி யார் இந்தப் பெண் என ரசிகர்களை மிரள வைத்தவர் நடிகை ரித்திகா.

சிங் நிஜ வாழ்க்கையிலும் குத்துச் சண்டை வீராங்கனையாக வாழ்க்கையை தொடங்கியவர். தற்போது அருண் விஜய்யுடன் இணைந்து மீண்டும் குத்துச் சண்டை வீராங்கனையாக ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இடையில் மணிகண்டன் இயக்கத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் டிவி நிருபராக நடித்து அசத்தியபோதும் அந்தப் படம் தோல்வி அடைந்ததால் பின்னடைவைச் சந்தித்தார்.

ஆனால், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து ‘ஓ மை கடவுளே’ படத்தில் அதகளம் பண்ணியிருந்தற்கு கைமேல் பலன் கிடைத்ததுள்ளது. அந்தப் படத்தின் வெற்றியால் தற்போது ரித்திகா சிங்கிற்கு ‘பாக்ஸர்’ தவிர, ‘வணங்காமுடி’, ‘பிச்சைக்காரன் -2’ ஆகிய படங்கள் கிடைத்துள்ளன. இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பும் கொரோனா காரணமாக தேக்கமடைந்துள்ளதால், மீண்டும் குத்துச்சண்டையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ரித்திகா சிங்.

வீட்டில் பிரத்தியேக பயிற்சியாளரை வைத்து பயிற்சி எடுத்து வருகிறார் ரித்திகா. இதுவொரு பக்கம் இருக்க.. ‘பாக்ஸர்’ படத்தின் முதல் தோற்றம் போன்ற ஒரு போஸ்டரைப் பகிர்ந்து தனது ஆக்‌ஷன் ரசிகர்களை கலவரப்படுத்தியிருக்கிறார். அதில் குத்துச்சண்டையால் அருண் விஜய், ரித்விகா இருவருடைய முகமும் நசுங்கி ரத்தம் வருகிறது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: