கோரோனா காலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மணிரத்னம் ஒரு காரியம் செய்திருக்கிறார். டிஜிட்டல் சினிமா சேவை வழங்கி வரும் கியூப் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஓடிடி திரைக்காக நவரசா என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்துள்ளார்.
மொத்தம் ஒன்பது குறும்படங்கள் கொண்ட படம் இது. ஒவ்வொரு குறும்படத்தையும் ஒரு இயக்குனர் இயக்கியிருக்கிறார். ரவீந்திரன் ஆர்.பிரசாத், அரவிந்த்சாமி, ஹலிதா சமீம், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், வசந்த் இவர்கள்தான் அந்த ஒன்பது பேர்.
இந்த ஒன்பது படங்களில் கெளதம் மேனன் இயக்கியுள்ள குறும்படத்தில் சூர்யா நடிக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது ஒன்றுதான் இந்த தொகுப்பி சிறப்பாக வந்துள்ளதாம். மற்ற எட்டும் சரியான அட்டு, இப்படி நாம் படம் கொடுத்தால் ஓடிடிகாரன் எப்படி நல்ல விலை கொடுப்பான் என்று மணிரத்னம் பொறிந்து தள்ளிவிட்டாராம். இதனால் மற்ற எட்டு இயக்குநர்களும் செம்ம அப்செட். இந்நிலையில் சில படங்களுக்கு மணிரத்னமே, பட்டி, டிங்கரிங் பார்த்துள்ளார். ஆர்ட்டிஸ்டுகளை வரவழைத்து சில காட்சிகளை அவரே ஷூட் செய்து இணைத்துள்ளார். சில இயக்குநர்களிடம் ரீஷூட் செய்யும்படி சொல்லிவிட்டாராம். ஆகஸ்ட் மாதம் வெளியிடலாம் என்று திட்டம் வைத்திருந்த நிலையில் அதில் இப்போது நடக்கிற கதை இல்லை என்கிறார்கள் மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரத்தில்.