free website hit counter

Sidebar

16
வெ, மே
28 New Articles

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆகும்.
சென்னை,

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்ரல் 13) கடைசி நாள் ஆகும்.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

2023-24-ம் ஆண்டிற்கான நீட்தேர்வு மே 7-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு எழுதவும் 499 நகரங்களில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி நிறைவடைந்தது. அதையடுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க 13-ந் தேதி (இன்று) வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று (ஏப்ரல் 13 ) முடிவடைகிறது. மேலும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று நள்ளிரவு 11.30 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் 13 ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், இது குறித்த விவரங்களுக்கு 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula