free website hit counter

ஒடிசாவில் ஏவுகணைகளுக்கான திட எரிபொருள் ‘பூஸ்டர்’ பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஒடிசாவில் ஏவுகணைகளுக்கான திட எரிபொருள் ‘பூஸ்டர்’ பரிசோதனை வெற்றிபெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.
ஏவுகணைகளில் பயன்படுத்தக்கூடிய திட எரிபொருள் குழாயுடன் கூடிய ராம்ஜெட் ‘பூஸ்டரை’ ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் உருவாக்கியுள்ளது.

ஐதராபாத் இமாரத் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள அதிசக்தி பொருட்கள் ஆய்வகம் ஆகிய டி.ஆர்.டி.ஓ. ஆய்வகங்கள் இணைந்து இந்த பூஸ்டரை உருவாக்கியிருக்கின்றன. ஏவுகணைகளை சூப்பர்சானிக் வேகத்தில் செலுத்தி, வான்வழி ஆபத்துகளை இடைமறித்து தகர்க்க இந்த உந்து அமைப்பு முறை உதவும்.

இந்த பூஸ்டரின் பரிசோதனை, ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.இந்த சோதனை வெற்றி தொடர்பாக டி.ஆர்.டி.ஓ. குழுவினருக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction