free website hit counter

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு ரூ. 75 நாணயம் அறிமுகம் - மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
இந்தியாவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகிரியிலும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வலதுபுறமாக இடம்பெறுகிறது.

இத்துடன் இந்திய ரூபாய் சின்னம் மற்றும் 75 என்ற எண் அசோகா சின்னத்தின் கீழ் இடம்பெறுகிறது. நாணயத்தின் மற்றொரு புறத்தில் பாராளுமன்ற கட்டிடத்தின் படம் இடம்பெறுகிறது. சன்சத் சங்குல் என்ற வார்த்தை தேவனகிரியிலும், பாராளுமன்ற வளாகம் என்ற வார்த்தையும் நாணயத்தில் பொறிக்கப்படுகிறது.

இந்த நாணயம் வட்ட வடிவத்தில், 44 மில்லிமீட்டர் சுற்றளவு, நாணயத்தை சுற்றி 200 பற்கள் அடங்கிய டிசைன் வழங்கப்படுகிறது. 35 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய நாணயம் four-part அலாய் மூலம் உருவாக்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் சில்வர், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் ஜின்க் இடம்பெற்று இருக்கும்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார். திறப்பு விழாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவான 25 கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன. மறுபுறம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க எதிர்ப்பு தெரிவித்து 20 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction